இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல கவர்ச்சி நடிகை!…

விளம்பரங்கள்

மலேசியா:-பிரபல மலேசிய நடிகை பெலிசிய ஏப் இவர் திடீர் என இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளார். இவர் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தான் இன்று முதல் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாகவும், இதனால் தான் மறுபிறவி எடுத்தது போன்ற ஒரு உணர்வு தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் 8,35,000 பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெலிசிய ஏப் பிரபலமாக உள்ள பிளே பாய் புத்தகத்தில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்துள்ளார். பிறப்பால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இவர் சிறிது காலம் புத்த மதத்தை பின்பற்றி வந்தார். இந்நிலையில் தற்போது திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். பேஸ்புக்கில் அறிவித்துள்ள மற்றொரு அறிவிப்பில் இன்று தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் என்றும், நான் மறுபிறவி எடுத்த நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: