செய்திகள்,தொழில்நுட்பம்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் விவசாயிகளுக்கு 24 மணி நேர டி.வி. சேனல்!…

விவசாயிகளுக்கு 24 மணி நேர டி.வி. சேனல்!…

விவசாயிகளுக்கு 24 மணி நேர டி.வி. சேனல்!… post thumbnail image
புதுடெல்லி:-விவசாயிகளுக்காக 24 மணி நேர தனி டி.வி. சேனல் ஒன்றை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதில், விவசாய தகவல்கள், வானிலை தகவல்கள், விதை தகவல்களை மையப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. ‘டி.டி. கிஸான்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலை விரைவில் கொண்டு வரும் பணியில் மத்திய அரசும் பிரசார் பாரதியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களிலும் கிசான் டிவி சேனல்கள் கொண்டு வரப்படும் என பாரதீய ஜனதா கட்சி 2014 பொதுத் தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தனர்.அதற்கு முன்னதாகவே, பல்வேறு மாநிலங்களிலும் ஒளிபரப்ப கூடிய வகையில் அனைத்து மொழிகளிலும் கிசான் சேனலை கொண்டு வர வேண்டும் என பிரசார் பாரதியும் ஆலோசித்து வந்தது. இறுதியில், ஒரே சேனலில் 11 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.எனினும், தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஏற்கனவே விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

கிசான் சேனல் குறித்து அதிகாரிகள் கூறுகையில், விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரிப்பது சவாலான ஒன்றாகும். ஏனென்றால், பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயம் இடத்திற்கு இடம் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் பயிரிடப்படும் பயிர்களும் மாறுபடும். வானிலையும் இடத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டேயிருக்கும். ஆகவே, பல்வேறு மொழிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும் அவர்களது பகுதிகளை சார்ந்த விவசாய செய்திகளை வழங்கும் சவால் உள்ளது.எனினும், சவால்களை கடந்து மிக விரைவில் டி.டி.கிஸான் சேனல் தோன்றும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி