செய்திகள்,முதன்மை செய்திகள் மும்பை பெண் வக்கீல் பல்லவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!…

மும்பை பெண் வக்கீல் பல்லவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!…

மும்பை பெண் வக்கீல் பல்லவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!… post thumbnail image
மும்பை:-மத்திய மும்பையின் வடாலா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பல்லவி பர்காயஸ்தா. 25 வயதான அவர் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி தனது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்த சஜ்ஜத் அகமது மோகுல் (22) என்ற வாலிபர் இந்த கொலையைச் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டு மும்பை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தனியாக இருந்த வழக்கறிஞர் பல்லவியை சஜ்ஜத் கற்பழிக்க முயன்றபோது அவர் தடுத்ததால் கத்தியால் குத்தி கொன்றது நிரூபணமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தண்டனை விவரம் வெளியிடப்படவில்லை.

மிக கொடூரமாக கொலை செய்துள்ள சஜ்ஜத்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையே பல்லவியின் பெற்றோரும் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது, குற்றவாளி சஜ்ஜத்துக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி