செய்திகள்,திரையுலகம் இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்…

இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்…

இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாசர் போலீஸ் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் நாயகன் ஸ்ரீகாந்த் ஐபிஎஸ் படித்து முடித்துவிட்டு போலீசில் சேர விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார். போலீசில் சேர்ந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. குற்றவாளியை தண்டிக்க முடியாது, ஏதாவது ஒரு வழியில் தப்பித்து விடுகிறார்கள் என்று நினைப்பதால் அவர் போலீஸ் வேலையில் சேராமல் இருக்கிறார். ஆனால் நாசருக்கோ தன் மகன் போலீசில் சேர வேண்டும் என்பதுதான் விருப்பம்.

ஒருநாள் தன் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஸ்ரீகாந்த், நாயகி சார்மி வீட்டில் விநாயகர் சிலையை திருடுகிறார். இதைப்பார்ந்த சார்மி அவர்களை பிடிக்க முயற்சி செய்கிறார். அப்போது ஸ்ரீகாந்தை பார்த்தவுடன் சார்மிக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதிலிருந்து அவர்களுக்கு பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.
இதற்கிடையில் வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான கிருஷ்ணா பள்ளிக்கூடம், மருத்துவமனை தொடங்கி ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக சொந்த ஊருக்கு வருகிறார். அரசாங்கத்திடம் பேசி அதற்கான அரசாங்க இடத்தையும் வாங்கி அனுமதியும் பெருகிறார். இவ்வாறு தொடங்கினால் தங்களின் தொழில் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், அரசாங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ரவுடி பிரதீப் ராவத் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கிருஷ்ணாவை அழிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இதுஒருபுறமிருக்க, போலீஸ் வேலையை உயர்வாக நினைக்கும் நாசருக்கு தனது பணியில் அவமானம் ஏற்படுகிறது. இதனால் ஸ்ரீகாந்த் போலீஸ் பயிற்சிக்கு செல்கிறார். அதன்பின்னர் கிருஷ்ணாவின் பள்ளிக்கூட அடிக்கால் விழாவும் நடைபெறுகிறது. அதில் கூலிப்படையை வைத்து கிருஷ்ணாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறார் பிரதீப் ராவத். அப்போது ஒரு போலீஸ் உதவியால் கிருஷ்ணாவும் நாசரும் கொல்லப்படுகிறார்கள். இதைக்கண்டு ஆவேசப்படும் ஸ்ரீகாந்த் அந்த போலீஸ் அதிகாரியை கொன்று விடுகிறார். இதனால் ஸ்ரீகாந்த் கைது செய்யப்படுகிறார்.இறுதியில் ஸ்ரீகாந்த் ஜெயிலில் இருந்து வெளியே வந்தாரா? அநீதியை அழித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஸ்ரீகாந்த் ஆக்ரோசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் பேசும் பஞ்ச் வசனங்கள், சண்டைக்காட்சிகள், ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. நாயகி சார்மி துறுதுறு நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.தந்தையாக நடித்திருக்கும் நாசர் நடிப்பால் மனதில் நிற்கிறார். போலீஸ் வேலையை பற்றி உயர்வாக பேசும் போதும், மகன் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் போதும் நடிப்பில் பளிச்சிடுகிறார். வில்லனாக நடித்திருக்கும் பிரதீப் ராவத் தனக்கே உரியதான வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் முந்தைய படங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால் பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். என்.சுதாகரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். சண்டைக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதம் அருமை.முந்தைய தமிழ் படங்களின் காட்சிகளை இயக்குனர் வி.சமுத்ரா தவிர்த்திருக்கலாம். படத்தின் பிற்பாதியில் திரைக்கதையின் விறுவிறுப்பு அருமை.

மொத்தத்தில் ‘இனி ஒரு விதி செய்வோம்’ அதிரடி………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி