விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிக்!…

விளம்பரங்கள்

லண்டன்:-இந்த ஆண்டிற்கான விம்பிள்டன் ஒற்றையர் போட்டி இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7(7), 6-4, 7-6(4), 5-7, 6-4 என்ற கணக்கில் பெடரரை ஜோகோவிக் வீழ்த்தி சாதனை படைத்தார்.

தனது எட்டாவது பட்டத்தை எதிர்பார்த்து ஆர்வத்துடன் கலந்துகொண்ட பெடரர் முதல் செட்டை கடுமையான போராட்டத்திற்கு பின் கைப்பற்றியபோதும் எவ்வித பதட்டமும் அடையாமல் நிதானமாக ஆடிய ஜோகோவிக் இரண்டாவது செட்டை 6-4 என்ற செட் கணக்கிலும், மூன்றாவது செட்டை 7-6(4) என்ற செட் கணக்கிலும் கைப்பற்றினார்.

பின்னர் நான்காவது செட்டை கடுமையான போட்டியில் 5-7 என்ற செட் கணக்கில் பெடரர் மீண்டும் கைப்பற்றினார். எனினும் சிறப்பாக விளையாடிய முதல் நிலை ஆட்டக்காரரான ஜோகோவிக் 6-4 என்ற செட் கணக்கில் 5வது செட்டை கைப்பற்றி பட்டம் வென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: