சிக்கலில் ரஜினி,கமல் நடித்த திரைப்படம்!…

விளம்பரங்கள்

சென்னை:-எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலித்தன.இந்நிலையில், ரஜினி-கமல் நடித்த 16 வயதினிலே படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கண்ணு களமிறங்கினார்.

அதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்த விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆனால், படத்தை வெளியிட தயாரானபோது, அப்படத்தின் சார்ட்டிலைட் உரிமத்தை வைத்திருக்கும் ஒரு சேனல், இவர்கள் படத்தை வெளியிடும்போது தாங்களும் 16 வயதினிலே படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருப்பது ராஜ்கண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அப்படி செய்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராதே என்று படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் செய்திருக்கிறார்.

இதன்காரணமாக, அப்படத்தை தானே தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதாக கூறியிருந்த ஒரு பிரபல தயாரிப்பாளர், அந்த சேனல் 16 வயதினிலே படத்தை வெளியிட தயாராகி விட்டதை அறிந்து, பின் வாங்கி விட்டாராம். அதனால்தான், டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்காக பல லட்சங்களை செலவு செய்து விட்டு, போட்ட காசை எப்படி எடுப்பது என்று தற்போது தடுமாறிக்கொண்டு நிற்கிறார் ராஜ்கண்ணு. அதையடுத்து, இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்ட சேனலிடம் நட்பு ரீதியான பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: