சரவணன் என்கிற சூர்யா படத்தின் டைட்டில் மாற்றம்!…

விளம்பரங்கள்

சென்னை:-ராஜா சுப்பையா என்பவர் இயக்கி, நடிக்கும் படத்திற்கு சரவணன் என்கிற சூர்யா என்று தலைப்பு வைத்திருந்தார். அவருக்கு ஜோடியாக நேகா காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்புக்கு நடிகர் சூர்யா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சூர்யாவின் இயற்பெயர் சரவணன். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. சூர்யாவின் மானேஜர் தன்னை மிரட்டி வருவதாக ராஜா சுப்பையா கோர்ட்டில் மனு கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பை போஸ் பாண்டி என்று மாற்றிவிட்டார் ராஜா சுப்பையா. இதுகுறித்து அவர் கூறும்போது, போஸ் பாண்டி என் அடுத்த படதிற்கான தலைப்பு அதனையே இந்தப் படத்திற்கு வைத்து விட்டேன். பழைய தலைப்பை நீக்கியதால் சில காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டிவந்தது. டப்பிங்கிலும் சில மாற்றங்களை செய்துள்ளேன். இதற்காக எனக்கு கூடுதல் பணம் செலவானது. புதிய தலைப்புடன் மீண்டும் தணிக்கை குழுவிற்கு படத்தை அனுப்பி இருக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: