செய்திகள் மேலாடையில்லாமல் கருப்பு பெயிண்ட் அடித்து ரோட்டில் நடமாடிய பெண்ணால் பரபரப்பு!…

மேலாடையில்லாமல் கருப்பு பெயிண்ட் அடித்து ரோட்டில் நடமாடிய பெண்ணால் பரபரப்பு!…

மேலாடையில்லாமல் கருப்பு பெயிண்ட் அடித்து ரோட்டில் நடமாடிய பெண்ணால் பரபரப்பு!… post thumbnail image
கோபன்கேகென்:-டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்கேகென் நகரின் அருகில் உள்ள பிரிடரிஸ்பெர்க் என்ற இடத்தில் அழகி ஒருவர் கருப்பு நிற டீசர்ட் அணிந்து மிக கவர்ச்சியாக நடமாடி கொண்டு இருந்தார். கூர்ந்து பார்த்த அந்த பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் அவர் அணிந்து கொண்டு இருந்தது. டி சர்ட் அல்ல டி சர்ட் வடிவில் மேலாடையின்றி உடம்பில் பெயிண்ட் செய்து உள்ளார்.

அந்த அழகிய பெண்ணும் தன்னை யாரும் பார்ப்பதை சட்டை செய்யாமல் ஒரு ரெஸ்டாரெண்ட்டில் வைன் ஆர்டர் செய்து குடித்துவிட்டு சாவகாசமாக சென்றார். பின்னர் தன்னை தானே மொபைல் போனில் படமும் எடுத்து கொண்டார். இவரை வேடிக்க பார்க்க கூட்டம் கூட தொடங்கியது. அனைவரும் மிகவும் அதிசயத்துடனும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் தொலைக்காட்சியினர் வீடியோ எடுத்தனர்.ஒருசிலர் தங்கள் மொபைல் போனில் அந்த பெண்ணை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இந்த வீடியோ யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டேனிஷ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது புதிய தொலைக்காட்சி தொடரை வித்தியாசமாக விளம்பரப்படுத்த மாடல் ஒருவரை டாப்லெஸ் ஆக நிற்கவைத்து உடலில் கருப்பு நிற டீசர்ட் வடிவில் பெயிண்ட் செய்து சாலையில் நடக்கும்படி செய்தது. எனபது தெரியவந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி