செய்திகள்,திரையுலகம் டி.எஸ்.பி போஸ்டர் வெளியிட்டார் நடிகர் கமல்!…

டி.எஸ்.பி போஸ்டர் வெளியிட்டார் நடிகர் கமல்!…

டி.எஸ்.பி போஸ்டர் வெளியிட்டார் நடிகர் கமல்!… post thumbnail image
சென்னை:-திரையுலகில் டி.எஸ்.பி என்று செல்லமாக அழைக்கப்படும் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த மாதமும், அடுத்த மாதமும் சான் ஜோஸ், டொராண்டோ, கனடா உள்ளிட்ட நாடுகள், நகரங்களில் கலை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் தமிழ், மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு அமெரிக்க இசை கலைஞர்கள் இசை அமைக்கிறார்கள். தமிழ், தெலுங்கு நட்சதிரங்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றிய இசை ஆல்பம் ஒன்றை சமீபத்தில் விஜய் வெளியிட்டார். அதன் பிறகு இந்த நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட போஸ்டர் உள்ளிட்ட புரமோசன் பிரின்ட்டுகளை கமல் வெளியிட்டார். நிகழ்ச்சியின் வடிவமைப்பு மற்றும் போஸ்டர் டிசைன் பற்றி கேட்டு தெரிந்து கொண்ட கமல் தேவி ஸ்ரீ பிரசாத்தை பாராட்டியோடு நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்களையும் சொன்னார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி