செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…

ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…

ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. மெயின் தீவில் உள்ள ஹோன்ஷு கிழக்கு கடற்கரையை மையமாக கொண்டு நில நடுக்கம் உருவானது.இதனால் மியாகோ, யமடா மற்றும் ஆட்சுகி நகரங்களும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதி அடைந்தனர்.

வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடவில்லை. சேத விவரம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் நியூ மெக்சிகோ அருகேயுள்ள அரிசோனவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு 5.2 ரிக்டரில் அது பதிவானது. போயனிஸ், எல்பாசோ, டெக்காஸ், அரிசோனா, நியூ மெக்சிகோ பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி