செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்!…

உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்!…

உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்!… post thumbnail image
போர்ட்டாலிஜா:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ட்டாலிஜா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2வது கால்இறுதி ஆட்டத்தில் பிரேசிலும், கொலம்பியாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே பிரேசில் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரேசில், எதிரணியின் கோல் கம்பத்தை பல முறை முற்றுகையிட்டது. கொலம்பியா கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டதால், 20 மற்றும் 28வது நிமிடங்களில் பிரேசில் அணியின் கோல் முயற்சி தடுக்கப்பட்டது.

முதல் பாதியின் முடிவில் பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. 69வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பின் மூலம் , பிரேசில் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. பதில் கோல் அடிக்க கொலம்பியா வீரர்கள் கடுமையாக போராடினர். அவர்களின் முயற்சிக்கு பலன்கிட்டும் விதமாக, 80வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. கொலம்பியா அணியின் ரோட்ரிகஸ், பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து வரும் வரும் 8ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி அணியை பிரேசில் எதிர்கொள்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி