செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து: காயம் காரணமாக பிரேசில் வீரர் நெய்மார் விலகல்!…

உலக கோப்பை கால்பந்து: காயம் காரணமாக பிரேசில் வீரர் நெய்மார் விலகல்!…

உலக கோப்பை கால்பந்து: காயம் காரணமாக பிரேசில் வீரர் நெய்மார் விலகல்!… post thumbnail image
பிரேசில்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி போட்டியில் கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி நேரத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

இன்னும் சில வாரங்கள் அவர் தேறி வர ஆகும் என்பதால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணியின் முக்கிய வீரரான நெய்மார் இந்த போட்டித்தொடரில் 4 கோல் அடித்துள்ளார். நெய்மார் காயம் காரணமாக விலகியுள்ளது பிரேசில் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி