செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!…

வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!…

வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!… post thumbnail image
சென்னை:-கவிப்பேரரசு வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் ஜூலை 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக வைரமுத்துவின் ஒவ்வொரு பிறந்தநாளும் கவிஞர்கள் கலை இலக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, பிறந்தநாள் விழா கோவை கொடீசியா அரங்கில் நடக்கிறது. வைரமுத்துவுக்கு இது 60வது பிறந்தநாள் என்பதால் அதனை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

விழா காலை 10 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கருத்தரங்கம், இரத்த தானம், 6000 மரக்கன்று நடுதல், 60 பள்ளிகளுக்கு கவிஞரின் 36 படைப்புகள் அடங்கிய பேழைகள் வழங்குதல், மாநிலம் தழுவிய கல்லூரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொள்கிறார். அவருடன் நா.மகாலிங்கம், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், ஐகோர்ட் நீதிபதி விமலா, அவ்வை நடராசன், நான்குதலைமுறை இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி