அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…

குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…

குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக புதிதாக 4 நோய் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், அனைவருக்கும் சுகாதார வசதிகள் அளிப்பதிலும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.உலக அளவில் போலியோ நோயை ஒழிப்பதற்காக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போலியோவை தடுப்பதற்காக இந்தியாவில் குழந்தைகளுக்கு தற்போது சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் உலகில் உள்ள 125 நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஊசி மூலம் செலுத்தும் போலியோ தடுப்பு மருந்தையும் இந்தியா அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.ஐக்கிய நாடுகள் சபை, ‘ஆயிரமாவது ஆண்டு அபிவிருத்தி திட்டத்தின்’ கீழ், உலக அளவில் நோய்களால் குழந்தைகள் இறப்பை வெகுவாக குறைக்க தீர்மானித்து உள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுக்கும் வகையில் உயிர்காக்கும் புதிய தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுகுழந்தைகள் வயிற்றுப் போக்கை உண்டாக்கும் ரோட்டாவைரஸ் மற்றும் ருபெல்லா போன்ற நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்டு இறப்பதை தடுக்கும் வகையில் இந்த மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

குழந்தைகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் இந்த மருந்துகள் உதவியாக இருக்கும். மூளைக்காய்ச்சல் நோயை தடுக்கவும் தடுப்பு மருந்து கொண்டுவரப்பட உள்ளது. அந்த வகையில் மொத்தம் 4 புதிய மருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.பல்வேறு ஆய்வு நிலைகளுக்கு பின்னரும், நோய் தடுப்புக்கான விஞ்ஞான ஆலோசனை குழு, இந்திய தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்தும் இந்த மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இந்த மருந்துகள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கிடைக்கின்றன. அங்கு போதிய வசதி உள்ளவர்கள் அந்த மருந்தை பெற்று பயன் அடைய முடிகிறது. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அந்த மருந்துகளை அரசாங்கம் வழங்க இருக்கிறது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி