செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!…

ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!…

ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!… post thumbnail image
சென்னை:-பிரபல ஆங்கில நாளேடு ஒன்று ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் நடிகைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாசகர்களின் ஓட்டு அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிடுவதாக அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. 2013ம் ஆண்டுக்கான முதல் 25 இடங்களை பிடித்த நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் முதல் இடத்தை ஸ்ருதிஹாசன் பெற்றுள்ளார். இரண்டாம் இடம் தமன்னாவுக்கும், 3வது இடம் எமி ஜாக்சனுக்கும் கிடைத்துள்ளது. சமந்தாவுக்கு 4வது இடம். 5வது இடம் பிடித்துள்ளார் ஹன்சிகா.

ஆண்ட்ரியா, ராகுல் ப்ரீத்தி சிங், காஜல் அகர்வால், ஆகியோர் 6,7,8வது இடத்தை பிடித்துள்ளனர். நயன்தாராவுக்கு கிடைத்திருப்பது ஒன்பதாவது இடம். பத்தாவது இடத்தில் அனுஷ்கா இருக்கிறார். இவர்கள் தவிர நஸ்ரியாவுக்கு 12வது இடமும், திரிஷாவுக்கு 13வது இடமும் கிடைத்துள்ளது.முதலிடம் பெற்றிருப்பது பற்றி ஸ்ருதி ஹாசன் கூறியிருப்பதாவது: நான் விரும்பும் ரசிகர்கள் என்னை விரும்பி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அழகால் மட்டுமே முதலிடத்தை பிடித்து விட முடியாது அழகு இன்று இருக்கும் நாளை இருக்காது.

அதையும் தாண்டி என்னிடம் வேறு எதையோ ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அழகை விட திறமைதான் முக்கியம். எத்தனை அழகாக இருந்தாலும் நல்ல அறிவு இல்லாவிட்டால் அதன் மூலம் பலன் இல்லை. திரையில் வரும் தோற்றத்துக்கும் காலையில் தூங்கி எழுந்தவுடன் இருக்கும் தோற்றத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேக்கப் மேன், காஸ்ட்யூம் டிசைனர், ஹேர் ஸ்டைலர், கேமராமேன் இத்தனை பேரின் உழைப்புதான் ஒரு நடிகையை அழகாக காட்டுகிறது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ருதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி