செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் எந்திரன் 2வில் நடிக்கும் அமீர்கான்?…

எந்திரன் 2வில் நடிக்கும் அமீர்கான்?…

எந்திரன் 2வில் நடிக்கும் அமீர்கான்?… post thumbnail image
மும்பை:-இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார்.ஆனால், தனது உடல்நிலை அதற்கு ஒத்து வராது என்று சொல்லி தவிர்த்து விட்டார் ரஜினி.

அதனால், அடுத்து யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிர ஆலோசனை நடத்தி வந்த ஷங்கர், இப்போது இந்தி நடிகர் அமீர்கானை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். இந்திய அளவில் பெரிய நடிகரான அவர் நடித்தால் எந்திரனை விட எந்திரன்-2 இன்னும் பெரிய படமாகி விடும் என்று நினைப்பவர், அப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இயக்குகிறாராம்.

இதுகுறித்து, அமீர்கானை ஷங்கர் சந்தித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், 200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் தயாரான நிலையில், இரண்டாம் பாகத்தை 250 கோடியில் இயக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர். அப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி