அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக ஒட்டகத்தை அறிவிக்க முடிவு!…

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக ஒட்டகத்தை அறிவிக்க முடிவு!…

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக ஒட்டகத்தை அறிவிக்க முடிவு!… post thumbnail image
ராஜஸ்தான்:-அரபு நாடுகளில், தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஒட்டகங்கள், இந்தியாவை பொறுத்தவரை, “வேடிக்கை’ பொருளாகவே உள்ளது. கலாசாரத்திலும், காலநிலையிலும் மாறுபடும் இந்திய மாநிலங்களின் சிறப்புகளில், ராஜஸ்தானை சிறப்பு பெற வைத்த பெருமை ஒட்டகங்களுக்கு மட்டுமே உண்டு.

அங்கு பெரும்பாலும் ஒட்டகங்களை இறைச்சிக்கு பயன்படுத்துவது இல்லை என்பதால் வாங்குவோரும், விற்போரும் விவசாய நோக்கிலேயே வாங்குகின்றனர்.
இந்நிலையில், ஒட்டகத்தை ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டகத்தை ராஜஸ்தான் மாநிலத்தின் விலங்காக அறிவிப்பதன் மூலம் அரிதாகி வரும் அந்த விலங்கினத்தை பாதுகாக்க தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கப்படும். சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஒட்டகங்கள் கடத்திச் செல்லப்படுவது தடுக்கப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ராஜேந்திர ரத்தோர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி