செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய அனிருத்!…

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய அனிருத்!…

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய அனிருத்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘ஐ’. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது. இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைக்கும் படங்களில் மற்றொரு இசையமைப்பாளரை பாட வைப்பதை தற்போது தமிழ் சினிமாவில் வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில், ‘ஐ’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள அனிருத், ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பாடியிருப்பது இதுவே முதல் முறை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி