உலகக் கோப்பை கால்பந்து: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேற்றம்!…

விளம்பரங்கள்

ரியோ டி ஜெனிரோ:-பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணியுடன் மோதியது.ஆட்டத்தின் ஆரம்ப நேரத்தில் இருந்து தனது முதல் கோலினை பதிவு செய்ய அர்ஜென்டினா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எதிர் அணி கோல் கீப்பர் தடுத்ததாலும், வலையினை பந்து ஒட்டிச் சென்றதாலும் விரையத்தில் முடிந்தன.

இலக்கிட்ட நேரமான 90 நிமிடங்கள் முடிந்த பின்னரும் இரு அணிகளுமே கோல் ஏதும் அடிக்காமல் இருந்தன. பின்னர், வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 116-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா முதல் கோலினை பதிவு செய்தார்.
அதற்கு பதிலடியாக அடுத்த ஓரிரு நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் கோல் வலையை நோக்கி திருப்பி விட்ட பந்து கம்பத்தில் பட்டு வெளியே வந்து விழுந்ததால் தனது கணக்குக்கு ஸ்விட்சர்லாந்து அணி கோல் ஏதும் பதிவு செய்யாத நிலையில் கூடுதல் நேரமும் முடிவடைந்தது.ஏஞ்சல் டி மரியா அடித்த கோலின் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: