அரசியல்,செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!… post thumbnail image
புதுடெல்லி:-பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் 69 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அந்தந்த மாநிலங்களின் வரி விகிதத்திற்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும்.மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.விலை உயர்வுக்குப் பதில், பெட்ரோலியப் பொருட்கள் மீதான சிறப்பு சுங்க வரியை பிரதமர் மோடி ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி