செய்திகள்,முதன்மை செய்திகள் சென்னை கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம்!…

சென்னை கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம்!…

சென்னை கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம்!… post thumbnail image
சென்னை:-மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இரண்டாக பிளந்து இரு பக்கமாக சரிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், கமோண்டோ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 1000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக இரவு–பகலாக நடந்த மீட்பு பணியால் முன்பக்கம் சரிந்த கட்டிடத்தின் 8 மாடி தளத்துக்கான இடிபாடுகள் இன்று முழுவதும் அகற்றப்பட்டு விட்டது.
எஞ்சிய 3 மாடி தளம் தூள்தூளாக நொறுங்கி மணல் போல் குவிந்து கிடக்கிறது. கட்டிட துகள்களை பொக்லைன் கொண்டு லாரிகளில் அள்ளப்பட்டு அந்த பகுதியில் சாலை ஓரம் உள்ள காலி இடங்களில் கொட்டப்படுகிறது.

விபத்து நடந்து 4 நாட்கள் ஆகிவிட்டதால் மணல் குவியலுக்குள் சிக்கி இருப்பவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இதனை நிரூப்பிக்கும் வகையில் விபத்து நடந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஈக்களும் மொய்க்கிறது.துர்நாற்றம் காரணமாக மீட்பு படையினர் நீண்ட நேரம் அங்கு நிற்க முடியாமல் திணறி வருகிறார்கள். முகமூடி அணிந்திருந்தாலும் அவர்கள் அவ்வப்போது அங்கிருந்து வெளியேறி தங்களை ஆசுவாசப்படுத்தி வருகிறார்கள். துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் ஸ்பிரே அடிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடல்களை கண்டறிய மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி