செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் அண்டார்டிகாவிலுள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்!…

அண்டார்டிகாவிலுள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்!…

அண்டார்டிகாவிலுள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்!… post thumbnail image
வாஷிங்டன்:-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அஹௌரி சின்ஹா. உயிரியல் ஆராய்ச்சி வல்லுனரான இவர் தற்போது அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மரபியல், செல் உயிரியல் மற்றும் வளர்ச்சித்துறையில் இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், சின்ஹா கடந்த 1971-72 ஆம் ஆண்டுகளில் பல்வேறு புதிய அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை கண்டுபிடித்திருக்கிறார். குறிப்பாக, கடந்த 1972, 1974 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கடலோர பகுதியான பெலிங்சாசென் மற்றும் அமுன்ட்சென் கடலில் கடற்சிங்கங்கள், திமிங்கலங்கள் மற்றும் பறவைகள் பலவற்றை கண்டுபிடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது கண்டுபிடிப்பை பாராட்டும் வகையில், அண்டார்டிகாவிலுள்ள எரிக்சன் ப்ளப் அருகிலிருக்கும் 990 மீட்டர் உயரமுள்ள மலைக்கு ” என பெயரிடப்பட்டுள்ளது. அண்டார்டிக் நேம்ஸ் அட்வைஸரி கமிட்டி மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய விஞ்ஞானியான சின்ஹா 1954 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்.சி. டிகிரியும், 1956-ல் பாட்னா பல்கலைக்கழத்தில் இருந்து எம்.எஸ்.சி ஜூவாலஜி டிகிரியையும் பெற்றவர்.அதன்பிறகு, அண்டார்டிக் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பல்லுயிர் பெருக்கம் செய்வது குறித்து ஆராய்ச்சி செய்ய அவரை அமெரிக்கா அழைத்தது. அங்கு சென்ற அவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 100-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளார். 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி பேராசிரியராகவும் உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி