வடிவேலுவின் நடிப்பில் உருவாகும் ‘இம்சை அரசன் – 2’…!

விளம்பரங்கள்

இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ. 4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.

வடிவேலுவின் திரையுலக வாழ்க்கையில் இது முக்கிய படமாக அமைந்தது. மேலும் பல படங்களில் கதாநாயகனாக அவர் நடித்து இருந்தாலும் இம்சை அரசன் படம் அளவுக்கு இல்லை. எனவே இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் வடிவேலு ஈடுபட்டுள்ளார். சிம்புதேவனை நேரில் சந்தித்து இதற்கான திரைக்கதையை தயார் செய்யும்படி கூறி உள்ளாராம்.

விஜய் படத்தை இயக்கும் முயற்சியில் சிம்புதேவன் தீவிரமாக இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் இம்சை அரசன் 23–ம் புலிகேசி 2–ம் பாகத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் வடிவேலு இரு வேடங்களில் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: