பா.ஜ.க.வை உளவு பார்த்த அமெரிக்கா… பரபரப்பு தகவல்களுடன்…!

விளம்பரங்கள்

வாஷிங்டன் :- கடந்த 2010 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளை உளவு பார்க்குமாறு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அந்நாட்டின் உளவு நிறுவனமொன்றுக்கு உத்தரவிட்டதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அதில் பாரதிய ஜனதா கட்சி, எகிப்தின் சகோதரத்துவ இயக்கம், பாகிஸ்தான் மக்கள் கட்சி, லெபனானின் அமல் மற்றும் பொலிவியாவின் கான்டினெண்டல் ஒருங்கிணைப்பு இயக்கம் ஆகிய இயக்கங்களை கண்காணிக்குமாறு அந்நாட்டு உளவு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அந்நாட்டு நீதிமன்றம் இதுபோன்று உத்தரவிட்டு வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் தவிர மற்ற அனைத்து நாடுகளையும் அந்த உளவு நிறுவனம் கண்காணிக்குமாறு உத்தரவிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆகியவை பற்றியும் கண்காணிக்க அந்த உளவு நிறுவனத்திற்கு நீதிமன்றம் சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: