நடிகர் தனுசுக்கு நம்பிக்கை கொடுத்த ரசிகர்கள்!…

விளம்பரங்கள்

சென்னை:-மயக்கம் என்ன, மரியான், நய்யாண்டி போன்ற படங்களின் தொடர் தோல்வியை முறியடித்து விட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதன்காரணமாக தற்போது நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதில் வேலையில்லா பட்டதாரியை விரைவில் வெளியிடவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அந்த படத்தை வெளியிட சில நிறுவனங்களை அணுகியபோது, வேலையில்லா பட்டதாரியை நாங்கள் வாங்கி வெளியிட வேண்டு மென்றால், சிவகார்த்திகேயனை வைத்து நீங்கள் தயாரித்து வரும் டாணா படத்தையும் எங்களுக்கே தரவேண்டும் என்று நிர்ப்பந்தம் விதித்தனர். இதனால், சிவகார்த்திகேயன் படத்தை வைத்து நம் படத்தை விற்பனை செய்ய வேண்டியுள்ளதே என்று நொந்து போனார் தனுஷ்.

அதையடுத்து, வேலையில்லா பட்டதாரி படத்தின் டீசர், ட்ரெய்லரை வெளியிட்ட தனுஷ், சமீபத்தில் இன்னொரு வித்தியாசமான ட்ரெய்லரையும் இணையதளத்தில் வெளியிட்டார். அதை பத்தே நாளில் 15 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் கண்டுகளித்து லைக் பண்ணியுள்ளார்களாம். அதனால், இந்த படத்தை ரசிகர்கள் கட்டாயம் வெற்றி படமாக்கி விடுவார்கள் என்று அளவில்லா நம்பிக்கையில் இருக்கிறார் தனுஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: