திகில் திரைப்படமாக உருவாகும் ‘ஜித்தன் – 2’…!

விளம்பரங்கள்

2005-ம் வருடம் ரமேஷ், பூஜா, சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியானப் படம் ‘ஜித்தன்’. இப்படம் அனைத்து தரப்பினரிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரமேஷ் தன் பெயருக்கு முன்னால் ஜித்தன் என்ற படத்தின் பெயரை சேர்ந்து கொண்டார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

‘ஜித்தன்’ ரமேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான இவர்களுக்குத் தமிழில் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய கதையை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இப்படத்தை மேலாண்மை கல்வியில் தங்கப்பதக்கம் வென்ற ராகுல் பரமஹம்சா என்ற புதியவர் இயக்குகிறார். முதல்பாகத்தில் இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.

சமீபகாலமாக இரண்டாம் பாக கதைகள் வெற்றி பெற்று வருவதோடு, காஞ்சனா, பீட்சா, யாமிருக்க பயமேன் போன்ற அமானுஷ்ய படங்கள் பலவும் வெற்றி பெற்றிருப்பதால், அந்த வரிசையில் ஜித்தன்-2 படமும் வெற்றியடையும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: