கமலிடம் நடிப்பு கற்றுக்கொண்ட நடிகர் தனுஷ்!…

விளம்பரங்கள்

சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அனேகன்’ படத்தில் அவர் நடிக்கும் ஒரு வேடத்தில் 1980களில் நடக்கும் கதையை சித்தரிக்கபபட்டுள்ளதாம். அதனால் அந்த காலகட்டத்தில் வந்த படங்களில் எந்தமாதிரியான காஸ்டியூம் அணிந்தார்களோ அதேபோன்று அணிந்து நடிக்கும் தனுஷ், அப்போது கமல் சில படங்களில் நடித்துள்ள வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மட்டுமின்றி, கமல் சாயலில் நடிப்பை பிரதிபலித்துள்ளாராம்.

கமல் மாதிரி ஒரு படத்திலேனும் நடிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்ற தனுஷின் நீண்டகால ஆசையை இந்த படத்தில் நிறைவேற்றியிருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.
முன்னதாக, இந்த வேடத்தில் நடிப்பதற்கு முன்பாக அந்த காலகட்டத்தில் கமல் நடிப்பில் வெளியான குரு, உல்லாச பறவைகள், வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களை பார்த்தும் தன்னை தயார்படுத்திக்கொண்டாராம் தனுஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: