செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஆண்களை அதிகளவில் பணியில் அமர்த்தும் பேஸ்புக்!…

ஆண்களை அதிகளவில் பணியில் அமர்த்தும் பேஸ்புக்!…

ஆண்களை அதிகளவில் பணியில் அமர்த்தும் பேஸ்புக்!… post thumbnail image
மென்லோ பார்க்:-உலகம் முழுவதும் 1.28 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.இந்நிலையில், கூகுள், யாஹூ, லிங்கெடின், உள்ளிட்ட வலைத்தளங்களும், இண்டெல், சிஸ்கோ, எச்.பி. உள்ளிட்ட சிலிகான் வேலி நிறுவனங்களும் தங்களது பணியாளர் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பேஸ்புக்கும் தனது பணியாளர் விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில், மற்ற சமூக வலைத்தளங்களை காட்டிலும் பேஸ்புக் நிறுவனம் 85 சதவீதம் ஆண் ஊழியர்களையே கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிலும், அதிகபட்சமாக 57 சதவீதம் பேர் வெள்ளை நிறத்தவர்களையும், 34 சதவீதம் பேர் ஆசியாவை சேர்ந்தவர்களையும் பணியாளர்களாக கொண்டுள்ளது. ஆனால், கருப்பு நிறத்தவர் 2 சதவீதம் மட்டுமே பேஸ்புக்கில் பணியாற்றுகின்றனர்.

அதேபோல், உலக அளவில் பேஸ்புக் நிறுவனம் சீனியர் லெவல் எம்பிளாயிஸ் என்றழைக்கப்படும் சி.இ.ஓ, எம்.டி. போன்ற உயர் மட்ட பணியாளர்களிலும் ஆண்களையே அதிக அளவில் கொண்டுள்ளது.இந்த தகவலை பேஸ்புக் நிறுவனத்தின் குளோபல் ஹெட் மேக்ஸின் வில்லியம்ஸ் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி