இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக டிராவிட் நியமனம்!…

விளம்பரங்கள்

லண்டன்:-இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டி 20 போட்டியிலும் விளையாட உள்ளது.அதில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் ப்ளட்சர் கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டு மிகுந்த அனுபவம் உள்ள டிராவிட் அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொண்டதை தொடர்ந்து டிராவிட் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ.யின் செயலாளரான சஞ்சய் படேல் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், இந்திய அணியின் முக்கிய பொறுப்பை டிராவிட் ஏற்க உள்ளது இது தான் முதன்முறையாகும். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பாவனான சுனில் கவாஸ்கர் கடந்த மார்ச் மாதம் இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: