செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்!…

ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்!…

ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்!… post thumbnail image
சென்னை:-ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்து யார் கைப்பற்றுவது என்ற களோபரம் கோடம்பாக்கத்தில் வெடித்திருக்கிறது. அஜீத்தின் அபிமானிகள் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று மேடைகளில் முழக்கமிடுவது போன்று, விஜய் அபிமானிகளும் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சமீபத்தில் ஒரு வார பத்திரிகை அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார்? என்று நடத்திய கருத்துக்கணிப்பில், விஜய் ஜெயித்தாக அறிவித்தது. இதனால் அஜீத்தின் ரசிகர்கள் கொதித்து விட்டனர். அது நேர்மையாக நடந்த வாக்கெடுப்பு அல்ல. அதில் ஏதோ சதி நடந்திருக்கிறது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக விஜய்-அஜீத் இருவரும் மோதிக்கொள்ளும் நிலையில், இந்த கருத்துக்கணிப்புக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த கருத்துக்கணிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் மீது கோபத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். இருவரது ரசிகர்களும் போஸ்டர் மற்றும் சமூக வலைதளங்களில் மாறி மாறி வசைபாடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி