செய்திகள் நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார் என பிரபல பாடகி அறிவிப்பு!…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார் என பிரபல பாடகி அறிவிப்பு!…

நைஜீரியாவில்  கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார் என பிரபல பாடகி அறிவிப்பு!… post thumbnail image
அபுஜா:-நைஜீரியாவில் உள்ள போகொஹாரம் என்னும் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் அங்கு ஒரு தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றது. மேற்கத்திய கல்விக்குத் தடை என்ற பொருள் கொண்ட பெயருக்கு ஏற்ப பெண்கள் கல்வி கற்பதைத் தடை செய்யும்வண்ணம் கடந்த ஏப்ரல் மாதம் சிபோக் என்ற கிராமத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்துவந்த 276 பெண்களைக் கடத்திச் சென்றுள்ளது.

இவர்களைப் பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்குமாறு கூறி சர்வதேசப் பிரபலங்களான மிச்சேல் ஒபாமா, டேவிட் கேமரூன் போன்றோர் ஆதரவளிக்கும் சமூக ஊடகப் பிரச்சாரமான ‘பிரிங் பேக் அவர் கேர்ள்ஸ்’ போன்றவற்றின் தொடர் வலியுறுத்தலுக்கு இடையிலும் அந்தப் பெண்கள் இருக்குமிடம் இன்னும் தெரியவில்லை. இதனிடையில் மீண்டும் ஒருமுறை நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் 60க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்கள் மற்றும் 31 சிறுவர்களை போகொஹாரம் இயக்கம் கடத்தியுள்ளது என்று கூறப்படுகின்றது. கடந்த வாரம் போர்னோ மாநிலத்தில் நடைபெற்ற தொடர் தாக்குதல்களில் பலர் பலியானதுடன் இந்தக் கடத்தல்களும் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்களில் உயிர் தப்பிய பலர் அடமாவா பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும், மற்றவர்கள் தொடர்ந்து ஊர்,ஊராக சென்றுகொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. கடத்தப்பட்ட பெண்களை மீட்கும் முயற்சியின் புது வரவாக அந்நாட்டின் இமோ மாநிலத்தில் பிறந்து தற்போது பிரபல பாப் பாடகியாக விளங்கும் 23 வயதான அடோகியே குரல் கொடுத்துள்ளார்.இவர் நைஜீரியாவுக்கான அமைதித் தூதராகவும் ஐ.நா அமைப்பில் பணியாற்றி வருகின்றார். கடத்தப்பட்ட பெண்கள் அனைவரும் 12லிருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மிகவும் சிறியவர்கள் ஆவர். அவர்களுக்கு பதிலாக என்னை எடுத்துக்கொண்டு அவர்களை விடுவித்துவிடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு மக்களிடையே பல தரப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது. இவரது ஆதரவாளர்களில் பலர் இது துணிச்சலான முடிவு என்றும் அவரை ஒரு ஹீரோ என்றும் புகழ்ந்துள்ளனர். அதேசமயம் இது ஒரு சந்தர்ப்பவாதமான விளம்பரம் என்றும் பலர் விமர்சித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி