செய்திகள்,திரையுலகம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ஸ்ரீதிவ்யா!…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ஸ்ரீதிவ்யா!…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ஸ்ரீதிவ்யா!… post thumbnail image
சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் அவருடன் டாணா படத்தில் கைகோர்த்துள்ளார். இரண்டு பேருமே இந்த படத்தில் நெருக்கம் காட்டி நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதோடு, முந்தைய படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு இதில் மாடர்ன் கேர்ள் வேடம். அதனால், அதர்வாவுடன் நடித்துள்ள ஈட்டி படத்தை விடவும் இப்படத்தில் கவர்ச்சிக்கதவுகளை கூடுதலாக திறந்துவிட்டுள்ளார். மேலும், காதலை வெளிப்படுத்தும் ஒரு உருக்கமான காட்சியில் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்வது போல் படமாக்கினாராம் இயக்குனர்.அப்போது, சிவகார்த்திகேயனுககு முத்தம் கொடுக்க ஸ்ரீதிவ்யா தயாராகி விட்டபோதும், சிவா தான், என் படத்தை இளசுகளாக பார்க்கிறார்கள். நான் முத்தம் கொடுத்தால் பின்னர் அவர்களும் அதை பின்பற்றுவார்கள். அதனால் அவர்கள் கெட்டுப்போவதற்கு நானே காரணமாகி விடுவேன் என்று மறுத்துள்ளார்.

ஆனபோதும், ஸ்ரீதிவ்யா விடவில்லையாம். காதலை சொல்ல முத்தம் கொடுப்பது ஒன்றும் தவறில்லை. நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நான் கொடுக்கிறேன் என்று சொன்னாராம். அதனால், டைரக்டருக்கு ரொம்ப சந்தோசமாக விட்டதாம். அதையடுத்து, ஸ்ரீதிவ்யாவே சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுப்பதுபோன்று படமாக்கியிருக்கிறார். இந்த சேதி படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கு சென்றபோது, ஸ்ரீதிவ்யாவுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்லி மெசேஜ் பண்ணியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி