செய்திகள்,திரையுலகம் ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…

ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…

ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் 2010ல் வெளியானது. அதையடுத்து, ராணா படத்தில் நடிக்கயிருந்தபோது ரஜினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த படத்தை கிடப்பில் போட்டனர். அதோடு, ரஜினியை சில ஆண்டுகளுக்கு நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிசன் போட்டதால், 4 வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கோச்சடையான் அனிமேசன் படம் வெளியானபோதும், லிங்கா ரஜினி நேரடியாக நடிக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் அப்படம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, 2014ல் கோச்சடையான், 2015ல் லிங்கா என்றுதான் முன்பு திட்டமிட்டிருந்தனர். ஆனால், படத்தை இயக்குவது அதிரடி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என்பதால், குறுகிய காலத்தில் பாதி படத்தை முடித்து விட்டவர், இன்னும் ஒரே மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து விடுவார் என்கிறார்கள்.

அதனால், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் அன்பளிப்பாக லிங்காவை வெளியிட்டு விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம் ரவிக்குமார். அவரது இந்த யோசனையை ரஜினியும் வரவேற்றுள்ளாராம். அதனால் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.
அப்படி அவர்கள் திட்டமிட்டிருப்பது போன்று ரஜினியின் பிறந்த நாளில் லிங்கா திரைக்கு வந்தால், கடந்த 25 ஆண்டுகளில் ரஜினி பிறந்த நாளில் வெளியான படம் இதுவாகத்தான் இருக்குமாம். அதோடு, இந்த 2014ல் ரஜினி நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வந்த கணக்கும் ஆகிவிடும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி