பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!…

விளம்பரங்கள்

சென்னை:-அன்சிபா ஹாசன் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். கடந்த வருடம் இது ரிலீசானது. அதன் பிறகு தொடர்ந்து தமிழில் படங்கள் வராததால் மலையாளத்துக்கு போனார்.

அங்கு திரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. மலையாள பட உலகில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையும் நிகழ்த்தி உள்ளது.திரிஷ்யம் படத்தில் நடித்ததன் மூலம் அன்சிபா ஹாசன் பிரபலமானார். அவருக்கு கதாநாயகி வாய்ப்பு குவிகிறது. மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். பட வாய்ப்புக்காக அவர் கவர்ச்சிக்கும் மாறியுள்ளார்.தனது கவர்ச்சி ஸ்டில்களை சமீபத்தில் இன்டர்நெட்டில் பரவ விட்டார்.

அந்த படங்களை பார்த்து பல ரசிகர்கள் அவர் அழகை பாராட்டி கருத்துக்கள் பதிவு செய்தனர். ஆனால் வேறு சிலர் கண்டனம் தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.அன்சிபா ஹாசன் பேஸ்புக்கில் மிரட்டல்களை பதிவு செய்துள்ளார்கள். இது போன்று கவர்ச்சி போஸ் கொடுப்பது மத கொள்கைக்கு விரோதமானது. இந்த செயலுக்காக கடவுள் முன் தண்டனை கிடைக்கும் என்று மிரட்டி உள்ளனர். அன்சிபாவை மோசமான வார்த்தைகளால் திட்டியும் எச்சரித்தும் உள்ளனர். இதனால் அன்சிபா அதிர்ச்சியில் உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: