செய்திகள்,திரையுலகம் லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் சிவகார்த்திகேயன்!…

லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் சிவகார்த்திகேயன்!…

லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-லட்சுமிமேனனும், விஷாலும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்த பிறகு எல்லா ஹீரோக்களும் தங்கள் படத்தில் ஒரு லிப் லாக் முத்தக்காட்சி வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு எல்லா தரப்பும் ஆடியன்சும் கிடைச்சிருக்குறது சந்தோஷமா இருக்கு. இளம் பெண்கள் என்னை ஒரு அண்ணனா பார்க்குறாங்க. இளைஞர்கள் தங்களில் ஒருத்தரா பார்க்குறாங்க. தாய்மார்கள் மகனா பார்க்குறாங்க. குழந்தைங்களுக்கு என்னை எப்படி புடிக்குதுன்னே புரியல. எப்படியோ எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். அவுங்க மனசை புரிஞ்சிக்கிட்டேன்.

மான் கராத்தே படத்துல வில்லன் கால்ல விழுந்து அழும் சீன்ல ஏன் நடிச்சீங்கன்ன உரிமையோட கேட்குறாங்க. இனி அப்படி நடக்காம பார்த்துப்பேன். லிப் லாக் முத்தக்காட்சிகள்ல நடிக்கவே மாட்டேன், என் படங்கள் குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்கிறார் சிவகார்த்திகேயன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி