செய்திகள்,திரையுலகம் நடிகர் ஆர்யாவுக்காக ஓடோடி வரும் பிரபல நடிகைகள்!…

நடிகர் ஆர்யாவுக்காக ஓடோடி வரும் பிரபல நடிகைகள்!…

நடிகர் ஆர்யாவுக்காக ஓடோடி வரும் பிரபல நடிகைகள்!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை நாயகனாக்கி தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’.இதில் நாயகியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படத்தை, மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் சிஷ்யர் ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் 80களில் நடக்கும் காதல் கதையாக உருவாகி உள்ளது.

படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோவை 28ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவில் நயன்தாரா, திரிஷா கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.நயன்தாரா, திரிஷா இருவரும் தாங்கள் நடிக்கிற படத்தோட விழாவுக்குக் கூட வர யோசிப்பார்கள். அப்படியிருக்கையில் அமரகாவியம் விழாவுக்கு இருவரும் வர காரணம் என்னவாக இருக்கும் என்று கோலிவுட்டில் ஒரு பெரிய பேச்சே நிலவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி