சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் அமெரிக்கா!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறிவிட்டது. போராடும் புரட்சி படையினர், ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

பொது மக்களின் புரட்சி படைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. தங்களது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் அதிபர் பஷர் அல்– ஆசாத் அரசுக்கு ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் புரட்சி படைக்கு ரூ. 3 ஆயிரம் கோடியை அமெரிக்கா வழங்குகிறது. அதன் மூலம் அவர்கள் அதிநவீன போர்க்கருவிகள் வழங்கவும், அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஒப்புதலை அமெரிக்க பாராளுமன்றத்தில் பெற அதிபர் ஒபாமா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக அல்கொய்தா ஆதரவு பெற்ற ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் உள்ளனர்.அவர்கள் ஈராக்கில் முன்னேறி வருகின்றனர். புரட்சி படையை பலப்படுத்துவதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தையும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மீதான தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் முறியடிக்க முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: