செய்திகள்,திரையுலகம் அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!…

அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!…

அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-அஞ்சலியை தெலுங்கில் உயர்த்தி பிடித்த படம் ‘சீத்தம்மா வைகிட்டோ ஸ்ரீமல்லே சிட்டு’. இந்தப் படத்தில் நடிகர் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் இன்னொரு ஜோடியாக மகேஷ் பாபுவும், சமந்தாவும் நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி பாசக் கதை. ஸ்ரீகாந்த் இயக்கி இருந்தார்.

மணிசர்மா இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்றது. அது முதல் அஞ்சலி தெலுங்கில் முக்கிய நடிகையானார்.
தற்போது சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக தமிழில் படம் எதுவும் நடிக்கவில்லை. இந்த இடைவெளியை புரிந்து கொண்ட விஜி கிரியேஷன் என்ற நிறுவனம். அஞ்சலி நடித்த இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

படத்துக்கு ஆனந்தம் ஆனந்தமே என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், சமந்தா, அஞ்சலி எல்லோருமே தமிழுக்கு தெரிந்த முகம் என்பதால் தைரியமாக வெளியிடுகிறார்கள். அடுத்த மாதம் ரிலீசாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி