செய்திகள்,திரையுலகம் விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடிய ஜப்பானிய ரசிகர்கள்!…

விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடிய ஜப்பானிய ரசிகர்கள்!…

விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடிய ஜப்பானிய ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-தமிழ் நடிகர்களில் ரஜினிக்குத்தான் ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்த முத்து படம் ஜப்பானில் வெளியானபோது அங்குள்ள ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்களாம். அதிலிருந்து அங்கு ரஜினிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

அவரைத் தொடர்ந்து இப்போது விஜய்க்கும் ஜப்பானில் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.ஜப்பானில் வெளியாகும் விஜய் படங்கள் சமீபகாலமாக நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடுவது போன்று ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்களாம். அதோடு விஜய்க்கு ஏராளமானோர் போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி