செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஜூலை 5-ல் வெளியாகும் “அஞ்சான்” திரைப்படத்தின் டீசர்….

ஜூலை 5-ல் வெளியாகும் “அஞ்சான்” திரைப்படத்தின் டீசர்….

ஜூலை 5-ல் வெளியாகும் “அஞ்சான்” திரைப்படத்தின் டீசர்…. post thumbnail image
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

லிங்குசாமி இயக்கும் இப்படத்தில் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பால் யாதவ் ஆகிய பலரும் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் ஜூலை 5ம் தேதி வெளிவருகிறது என இப்பட இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதே தேதியில் போன வருடம் சிங்கம்-2 வெளியானது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சான்’ ஆகஸ்டு மாதம் 15ம் தேதி வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி