அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…

கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…

கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!… post thumbnail image
ஐதராபாத்:-ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின்போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

*கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் பதவியேற்றபின் தெரிவித்திருந்தார். ஆயினும், இதில் எதிர்பார்க்கப்படுவதைவிட அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே உண்மை நிலவரமாகும்.

*பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த தண்ணீரில் குரோமியம் 6 கலந்திருந்ததாக சோதனை மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. குரோமியம் அத்தியாவசியமானது மட்டுமில்லாமல் நச்சுத்தன்மையும் கொண்டதாகும். நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய வகை இந்தத் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்தது என்று என்சிசிஎம் தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார். அதிகரித்த அளவில் காணப்படும் இந்த நச்சுத்தன்மையானது புற்றுநோய் உட்பட பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என்று ஜெய்குமார் குறிப்பிடுகின்றார்.

*கங்கையில் சேரும் இந்த அசுத்தங்கள் கான்பூரில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளின் மூலமாகவே கலப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே இத்தகைய அசுத்தங்களையும் நீக்கக்கூடிய அளவில் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் கங்கையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இதுமட்டுமின்றி நீரில் உள்ள ஃபுளோரைட் தனமையைக் கண்டறிய உதவும் சோதனைக் கருவிகளும் இவர்களால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும் கிடைப்பதாக இவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி