சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் விருந்தாக “லிங்கா” ரிலீஸ்…!

விளம்பரங்கள்

‘எந்திரன்’ படம் வெளியாகி பெரிய இடைவெளிக்குப் பிறகு வெளியான படம் ‘கோச்சடையான்’. ‘கோச்சடையான்’ படத்திற்கு பின் உடனடியாக கமிட்டாகி ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனக்ஷி சின்ஹா, சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பிரம்மாண்ட செட்களை சாபுசிரில் அமைக்கிறார். ‘எந்திரன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

சினிமா உலகின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை பெற்ற இப்படத்தை தற்போது, ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். மேலும் பல வருடங்களுக்குப் பிறகு ‘முத்து’, ‘படையப்பா’ போன்று ஒரு மசாலா, காமெடி படமாக ‘லிங்கா’ அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 12ல் இப்படம் வெளியானால் பல வருடங்களுக்கு பிறகு ஒரே வருடத்தில் ரஜினியின் இரு படங்கள் வெளியாகும் நிகழ்வாய் இருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி