சதம் அடித்தார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா!…

விளம்பரங்கள்

சென்னை:-‘டபுள்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. தொடர்ந்து ஏய், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி, ஈ, ஆழ்வார், சரவணா, தோட்டா, தெனாவட்டு உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து, இப்போது 100வது படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் சிறப்பே அவரது குத்துப்பாடல்கள் தான். தனது அதிரடி குத்துப்பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். தற்போது அவர் ‘பிரியமுடன் ப்ரியா’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இது இவரது 100வது படமாகும். அசோக், ரேஷ்மி கெளதம் ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார், கிரீன் இந்தியா புரொடக்ஷன்ஸ் சார்பில் சாதிக் ஹூசைன் தயாரிக்கிறார்.100 படத்திற்கு இசையமைத்துள்ளது பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறியிருப்பதாவது, பிரியமுடன் ப்ரியா எனது 100வது படம். 100வது படம் என்பதற்காக ஸ்பெஷலாக இசையமைப்பது கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் எனது முழு திறமையை கொடுத்து கொண்டு தான் வருகிறேன். ஒவ்வொரு படத்திற்கும் இசையமைக்கும் போது அந்த படத்திற்கு இசையை நல்லா கொடுக்கணும் என்கிற பயம் என்னிடம் இருக்கும். அது முதல் படத்தில் தொடங்கி இப்போது 100வது படம் வரை தொடர்கிறது.

இனியும் அது தொடரும். நான் இன்னும் 1000 படங்களுக்கு இசையமைக்க வேண்டும். இசையில் நான் தான் பெரிய ஆள், எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க கூடாது, அப்படி நினைத்தால் அது நம்மை அழித்துவிடும், இது, என் அப்பா, எனக்கு சொல்லிய அறிவுரை. நான் இந்தளவுக்கு வளர காரணம், முதலில் என் பெற்றோர்கள், பிறகு எனக்கு ‘டபுள்ஸ்’ படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாண்டியராஜன் மற்றும் இப்போது வரை நான் பணியாற்றிய அத்தனை படங்களுக்கும் வாய்ப்பு கொடுத்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோருக்கும் என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: