கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யா’!…

விளம்பரங்கள்

சென்னை:-மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘த்ரிஷ்யம்’, கன்னடத்தில் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்தது. அனைத்து ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக சேன்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் மற்றும் பலர் நடிப்பில் இந்தப் படம் உருவாகியது. இளையராஜாவின் பின்னணி இசையும், பி.வாசுவின் இயக்கமும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாம். கன்னடத்தில் பி.வாசு புகழ் பெற்ற இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் அனைத்து சென்டர்களிலும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுவதாகச் சொல்கிறார்கள்.

ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்றும், ஒரு இடைவெளிக்குப் பிறகு அவருக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைத்தேடிக் கொடுத்திருக்கிறது என்றும் கன்னடத் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: