விஜய்யின் பிறந்த நாளை கத்தி பர்ஸ்ட் லுக், டீசரோடு கொண்டாடிய ரசிகர்கள்!…

விளம்பரங்கள்

சென்னை:-கடந்த பொங்கலுக்கு ஜில்லாவை கொடுத்த விஜய், வருகிற தீபாவளிக்கு கத்தியோடு வருகிறார். இந்நிலையில் தனது பிறந்த நாளின்போது கத்தி பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகும் என்று ஏற்கனவே தனது ரசிகர்களுக்கு அறிவித்திருந்த விஜய், தனது பிறந்த நாளில் கத்தியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.

கத்தி படத்தில் விஜய்-சமந்தா இடம்பெற்ற புகைப்படங்களுடன் கூடிய போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்ட விஜய் ரசிகர்கள் அதற்கு லைக் கொடுக்கவும் தொடங்கி விட்டார்கள்.
முறைப்படி ஏ.ஆர்.முருகதாஸ் பர்ஸட் லுக் போஸ்டரை வெளியிடுவதற்கு முன்பே, விஜய்யின் பேஸ்புக்கில் இருந்து கத்தி போஸ்டர் ஒன்றையும் அவரது ரசிகர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டு லைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

கத்தியில் விஜய்-சமந்தா ரொமான்ஸ் செய்யும் போட்டோவுக்கு மட்டும் ஒரே நாளில் 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் கொடுத்துள்ளனர். தமிழகத்தின் பல ஊர்களில் விஜய் ரசிகர் மனறங்களிலும் கேக் வெட்டி விஜய்யின் பிறந்த நாளை, கத்தி டீசரோடு கோலாகலமாக கொண்டாடினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: