செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…

ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…

ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!… post thumbnail image
ஜெய்ப்பூர்:-சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வில் வினம்ரிதா பட்னி என்ற மாணவி 107ஆவது ரேங்க் பெற்றிருந்தார். இதன்பின் மருத்துவப்படிப்பை முடித்து அவர் தனது தொழிலைத் தொடங்கும்போது அவரது குடும்பத்தின் 32ஆவது மருத்துவர் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

இவர்கள் குடும்பத்தின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த கடைசி பெண்ணான இவருக்கு முன்னர் அந்தக் குடும்பத்தில் மொத்தம் 31 பேர் மருத்துவர்களாகப் பணி புரிந்து வருகின்றனர்.இவர்களில் ஏழு பொது மருத்துவர்கள், ஐந்து மகப்பேறு மருத்துவர்கள், மூன்று கண் மருத்துவர்கள், மூன்று ஈஎன்டி சிறப்பு மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள், சிறுநீரக மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மனோதத்துவ மருத்துவர்கள், எலும்பியல் மருத்துவர்கள் என்று கிட்டத்தட்ட அனைத்துத் துறை நிபுணர்களும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களாகவே இருக்கின்றனர்.

மருத்துவர்கள் பற்றாக்குறையால் மாநில அரசு திண்டாடிவரும் இந்த காலகட்டத்தில் இந்த குடும்பம் மருத்துவத் தொழிலைத் தேர்வு செய்பவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்து வருகின்றது. பிரபலமான மருத்துவர்களாக விளங்கும் இவர்களில் பலரும் சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.தன்னுடைய மருத்துவக் குடும்பத்தைப் பற்றிப் பெருமையுடன் குறிப்பிடும் வினம்ரிதா பட்னி, மாநில அளவில் சிறந்த கூடைப்பந்து வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் மருத்துவ சேவையே தன்னுடைய குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி