செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கூகுளில் அதிக அளவு தேடப்பட்ட திரைப்படம் கத்தி…!

கூகுளில் அதிக அளவு தேடப்பட்ட திரைப்படம் கத்தி…!

கூகுளில் அதிக அளவு தேடப்பட்ட திரைப்படம் கத்தி…! post thumbnail image
கூகுள் தேடுபொறி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவல் ஒன்றில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் இந்தியாவின் தேடல்களில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். இந்த வருடம் ரிலீஸாகவுள்ள திரைப்படங்களில் எந்த படத்தை இந்தியர்கள் அதிகளவு தேடுகின்றார்கள் என்ற தகவல் ஒன்றை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவர இருக்கும் “ஹேப்பி நியூ இயர்” என்ற திரைப்படம் உள்ளது. இரண்டாவது இடத்தில் சல்மான் கானின் “கிக்’ மற்றும் மூன்றாவது இடத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ உள்ளது.

விஜய் நடிக்கும் கத்தி படம் இந்திய அளவில் மூன்றாவது தேடுதல் படமாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிந்தவுடன் கத்தி படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.

இந்த வரிசையில் நான்காவது இடத்தை ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் பாங் பாங் திரைப்படமும் ஐந்தாவது இடத்தில் மகேஷ் பாபு நடிக்கும் அகடு திரைப்படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் கூகுள் தேடுபொறி நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி