செய்திகள்,திரையுலகம் எந்திரன் 2வில் ரஜினிக்கு பதில் நடிக்கபோவது விஜய்யா? அஜித்தா?…

எந்திரன் 2வில் ரஜினிக்கு பதில் நடிக்கபோவது விஜய்யா? அஜித்தா?…

எந்திரன் 2வில் ரஜினிக்கு பதில் நடிக்கபோவது விஜய்யா? அஜித்தா?… post thumbnail image
சென்னை:-இந்திய சினிமாவின் மாபெரும் வெற்றி படம் ‘எந்திரன்’. இப்படத்தில் சிட்டி ரோபோவை கிளைமேக்ஸில் எதிர்காலத்தில் சோதனை கூடத்தில் வைத்திருப்பது போல் படத்தை முடித்திருப்பார்கள்.

இதனால் அடுத்த பாகம் கண்டிப்பாக வரும் என ரசிகர்களுக்கிடையே கேள்வி தோன்றியது. ஷங்கருக்கும் இந்த யோசனை வர ரஜினியை அணுகியுள்ளார். ரஜினி ‘லிங்கா’ படத்தில் பிஸியாக இருக்கிறார். மேலும் இப்படத்தில் அதிக சண்டைக்காட்சிகள் வரும் என்பதால் இதற்கு ரஜினி தன் உடல்நிலை மனதில் கொண்டு யோசித்து வருகிறாராம்.

இதனால் ஷங்கரின் அடுத்த டார்க்கெட் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அஜித் அல்லது விஜய் தானாம். இதில் யாருக்கு அந்த ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி