டிவி நடிகையை மணக்கிறார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் (67). இவரது மகன் ஜெயவர்த்தன் சிங் மத்திய பிரதேசத்தின் ரகோகார் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். மேலும் திக் விஜய் சிங்குக்கு 4 மகள்கள் உள்ளனர்.

இவரது மனைவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் திக் விஜய் சிங்குக்கும், பிரபல டிவி நடிகை அமிர்தா ராய்க்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் கசிந்தன.இருவரும் நெருக்கமாக இருந்த படங்களும் வெளியாகின. இதனை பகிரங்கமாக திக் விஜய் சிங்கும் ஒப்புக் கொண்டார். தந்தையின் காதல் அந்தரங்கமானது அதில் நான் தலையிட முடியாது என்று அவரது மகன் ஜெயவர்த்தன் சிங்கும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திக்விஜய் சிங்கும், நடிகை அமிர்தாராயும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். அமிர்தா ராய்க்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் ஆகி விட்டது. இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். தனது கணவரை முறைப்படி விவாகரத்து செய்ய உள்ளதாகவும், விரைவில் திக் விஜய் சிங்கை மணம் முடிக்க உள்ளதாகவும் டுவிட்டரில் அமிர்தா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: