வடிவேலு நடிக்கும் பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி!…

விளம்பரங்கள்

சென்னை:-தெனாலிராமன் படம் ப்ளாப் ஆனதால் கடும் மன நெருக்கடியில் இருந்தார் வடிவேலு. அதிலிருந்து மீண்டு வரும் வடிவேலு, அடுத்து என்ன படத்தில் நடிப்பது என்ற குழப்பத்திலேயே இருந்தார். தன்னை வைத்து படம் பண்ணுவதாக சொன்ன கே.எஸ்.ரவிகுமார் ‘லிங்கா’ படத்தை தொடங்கி பிஸியாகிவிட்டார்.

எனவே எந்த இயக்குநரை அழைக்கலாம் என்று தன் சகாக்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதன் முடிவில், தன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சிம்புதேவனை அழைத்து பேசினாராம் வடிவேலு. மீண்டும் தனக்கு ஒரு கதை பண்ணி தன்னை வைத்து படம் பண்ணும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

தற்போது விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்க இருப்பதால் என்னால் இப்போது வர முடியாது என்று மறுத்துவிட்டாராம் சிம்புதேவன். பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாக பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி என்ற கதையைச் சொல்லி இருக்கிறார் சிம்புதேவன். வடிவேலுவுக்கு கதை டபுள் ஓகே. விஜய் படத்தை முடித்த பிறகு பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி படத்தை இயக்கித் தருவதாக சொல்லி இருக்கிறார் சிம்புதேவன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: